Thursday, March 19, 2009

அந்த 48 மணி நேரம்

நாள்: 16 .01 . 2008 நேரம்: அதிகாலை .. 3.30 மணி.. இடம் :சேலம் பஸ் ஸ்டாண்ட்.
விஜய் பைக்ஐ நிறுத்திட்டு உள்ளே சென்றான் . சென்னையில் இருந்து வரும் பஸ் வந்துவிட்டதா என்று பார்த்தான்.. இன்னும் வரவில்லை.. இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடும்.. தான் இப்பொது செய்வது சரியா என்று யோசித்தான் மனச்சாட்சி தப்பு என்று பொட்டில்அறைந்தாற்போல் சொல்லியது.. இருப்பினும் வர சொன்னது நண்பனாக இருந்ததால் மனசாட்சிஐ அவன் குளிருக்கு அணிந்திருந்த ஸ்வெட்டெர் உள் பேசாமல் பத்திரமாக இருக்க சொலிவிட்டு காத்திருக்க தொடங்கினான்...

நேரம்: 3.40
காலையில் இப்படி வந்து உட்கார்ந்து இருப்பது எரிச்சலாக இருந்தது. ஜனவரி மாத குளிர் ஸ்வெட்டெர்ஐ தாண்டிஉள்ளே சென்று அவனை சில்லிட செய்தது.. சரி டீ குடிக்கலாம் என்று அருகில் இருந்த டீ கடைக்கு சென்றான்.அங்கே அந்த அதிகாலை நேரத்திலும் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது ,ஒரு டீ வாங்கி கொண்டு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டான்.அப்போது நான்கு இளம் பெண்கள் அங்கு நின்றுகொண்டு டீ குடிதுகொண்டிருந்தர்கள்.. கல்லூரி விடுமுறைக்காக ஊருக்கு சென்றுகொண்டிருப்பது அவர்கள் பேசுவதில் இருந்து புரிந்து கொண்டான்.. அந்த நால்வரும் விஜயை சைட் அடித்தவாறு டீ குடித்துகொண்டிருந்தார்கள்,,அதில் ஒருத்தி விஜயை பார்த்து எதோ "எ" ஜோக் அடிக்க மற்ற முவரும் சத்தமாக சிரித்தார்கள்.. அவர்கள் வயது அப்படி .. சேலம் மாநகரின் கனவு நாயகன் அவர்கள் முன் இருந்தால் வேறு என்ன தோணும்?. விஜய் அவர்கள் பேசுவதை கேட்டும் கேட்காதவனாய் சிரித்துகொண்டான் ..

நேரம்:3.45

சென்னைஇல் இருந்து வரும் பேருந்து உள்ளே வந்தது .. விஜய் சென்று பேருந்து அருகில்பார்த்தான். பயணிகள் நெடுந்துர பயணத்தின் அசதியாலும் தூக்க கலகத்திலும் ஒவொருவராக இறங்கி கொண்டிருந்தனர் பதினோராவது ஆளாக சூர்யா இறங்கினான் .. நடிகர் சூர்யாவை நினைவுபடுத்தும் உருவம்.. முகம் அவன் உடம்பில் உள்ள அசதியை கட்டியது . கிழே இறங்கி விஜயை பார்த்தான் முகத்தில் ஒரு பிரகாசம் .. விஜய் சிரித்தபடி அவன்அருகில் வந்தான் ..
விஜய்: எப்படி இருக்க மச்சான்?
சூர்யா: "நல்லா இருக்கேன்டா நீ எப்டி இருக்க? பார்த்து 2 வருஷம் ஆகுதுடா "..
"ம்ம் ... அதான் வந்துடள்ள வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் .. குளுருது .. டீ குடிகிரியா? "
"இல்லடா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஆத்துர்ல டீ குடிக்க நிறுத்துனாங்க அங்கயே குடிச்சிட்டேன் .. நீ வேணும்னா குடி.." என்றான் சூர்யா.
"இல்லடா நானும் இப்போ தான் குடிச்சேன்..சரி வா போகலாம்"
பைக் எடுத்துக்கொண்டு விஜய் ஸ்டார்ட் பண்ண சூர்யா பின்னால் அமர்ந்துகொண்டான்....
கிளம்பும் முன் சூர்யாவிடம் விஜய்," டேய் நல்லா யோசிச்சியா காலைல போய் தான் ஆகணுமா ? எனக்கு சரி இல்லன்னு தோனுதுடா ."
"நான் நல்லா யோசிச்சு தான் வந்துருக்கேன் டா .. ஒன்னும் ஆகாது நான் இருக்கேன்ல ஏன் பயபடுற?"

"நீ இருக்குறது தான்டா பயமே.. உனக்காக நான் வேற மாட்டபோறேன் .."

"டேய் உன் உயிர் நண்பனுக்காக இதுகூட செய்யமாடியா? "
"ஆமா இது ஒன்னு சொல்லிடு எனக்கு மட்டும் தான் தெரியும் நீ உயிர் எடுக்குற நண்பன்னு.."
"சரிடா உனக்கு இஷ்டம் இல்லனா இப்போவே திரும்பி போயிடவா ? சென்னை பஸ் ரெடியா இருக்கு.."
"நான் எப்டியும் போக சொல்ல மாட்டேங்குற திமிருல பேசுற.. சரி வந்துட்ட நடக்குறது நடகட்டும்.."
இருவரும் வீட்டுக்கு சென்று உறங்கினார்கள்..

நேரம் : காலை 7 மணி..
சூர்யா எழுந்து அரக்க பரக்க கிளம்பினான். "விஜய் எழுந்திருடா குளிச்சிட்டு கிளம்பனும்"
கண் விழித்த விஜய் சூர்யாவை பார்த்து மெதுவாக கேட்டான்.."அப்போ நிச்சயம் அவளை போய் பாக்கமுடிவு பண்ணிடியா?"

"ம்ம்.. இதுல என்ன சந்தேகம் ?அதுக்கு தான வந்துருக்கேன்.."
"டேய் எல்லாத்தையும் மறந்துடு டா.. உணக்கு ஒரு நல்ல லைப் அமையும்.. சந்தோசமா இருக்கும்.."
சூர்யா முகம் மாறினான்.. அவன் முகத்தில் ஒரு வெறி தெரிந்தது..
"சந்தோஷமா ? எனக்கா? எப்படி டா சந்தோசமா இருப்பேன்? உனக்கு எல்லாம் தெரியும் ல? "
"ஆனா இந்த நேரத்துல அதும் இனிக்கு போய் அவளை பாக்குறது தப்புன்னு தோனுது டா"
" டேய் நீ என் மேல உண்மையான பாசம் வச்சிருந்தா என் கூட வா இல்ல நான் மட்டும் போறேன் .. போகட்டுமா?"
"சரி கோச்சிக்காதடா.. ஒரு 10 நிமிஷத்துல ரெடி ஆகிடுறேன்"
விஜய் சொனது போல 10 நிமிஷத்தில் ரெடி ஆகிவிட்டான். இருவரும் பைக்கில் அமர்ந்து கொள்ள விஜய் கிக்கரை உதைத்தான்..
"போலாமா"-விஜய்
"ம்ம்"
"டேய் யோசிச்சிட்டியா? இப்போ கூட ஒனும் இல்ல உனக்கு டைம் பாஸ் ஆகுறதுக்கு ஏற்காடு போயிடு வரலாம்.. என்ன சொல்ற?"
"டேய் என்ன குழப்பாதடா ஏற்காடு நாளைக்கு போலாம்.. இப்போ நேர அவ வீட்டுக்கு போறோம் அவ்ளோதான்.. நீ ஏன் இப்டி பயபடுற? நான் இருக்கேன்ல தைரியமா வாடா "
"அதுக்கு இல்லடா இனிக்கு அவளை போய் பாக்குறது சரின்னு தோனல"
கோபம் ஆனா சூர்யா விஜய் ஐ பார்த்து கோபத்துடன் கேட்டான் ...
"இப்போ அவளை போய் பாக்குறதுல என்ன பிரச்சனை உனக்கு?"
விஜய் மெதுவாக சொன்னான்...

"டேய் நாளைக்கு கல்யாணம் டா............"

நண்பர்களே இது எனது முதல் பதிப்பு.. இந்த கதை நான் தொடர்வதும் விடுவதும் உங்கள் விமர்சனங்களை பொறுத்து..
நட்புடன்
கிஷோர்


9 comments:

  1. கிஷோர், யாருக்கு கல்யாணம்?

    ReplyDelete
  2. word verification வச்சிருக்கிங்க கமெண்ட்ஸ்க்கு?
    ஏன் தனியா இன்னொரு ப்ளாக்.

    ReplyDelete
  3. நான் ஒரு கதை எழுதியிருக்கேன். முயற்சி செய்து பாருங்களேன்.

    ReplyDelete
  4. "இப்போ அவளை போய் பாக்குறதுல என்ன பிரச்சனை உனக்கு?"
    விஜய் மெதுவாக சொன்னான்...

    "டேய் நாளைக்கு கல்யாணம் டா............"

    Kalkalana mudivu serious romba super a irunthuchu
    thodarnthu elunthungal climax punchu arumai ... valthukkal..

    namma kadaikkum vanthu ponga

    ReplyDelete
  5. நன்றாக இருந்தது.ஆனால் யாருக்குக் கல்யாணம் என்பது தெரியவில்லையே,கிஷோர்.

    ReplyDelete
  6. எதை வேண்டுமானாலும் எழுதலாம் தலைவா!
    ஆனா தேவையற்ற விசயங்களை தவிர்த்து நேரடியாக விசயத்துக்கு வாங்க!

    ReplyDelete
  7. தெளிவாக எழுதலாம். பொறுமையுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ஷண்முகப்பிரியன் சார் வலையை படியுங்கள். அதுவே போதும். எழுத்து தானாக வரும்.

    ReplyDelete
  8. நல்ல முயற்சி

    முதல் முயற்சி

    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. @ கிஷோர்

    மன்னித்து விடுங்கள் நான் இப்போது மாற்றி விட்டேன்
    எனக்கும் இது மாதிரி (Third Rated comments ) எழுத பிடிக்காது அதுவும் சக்கரையில் தனி மனித தாக்குதல் இருக்க கூடாது எனபது என்னோட பாலிசி ஆனா இந்த விஜய் டிவி இந்த பொண்ண எப்படியாவது சிங்கர் ஆக்கணும் என்று உள்ள சதி பண்ணுச்சு நல்ல சிங்கர் நிக்கப்பட்டாங்க மக்கள் நம்ம கை கொடுத்து கேள்வி கேட்ட நல மட்டுமே இப்போது அவர்களை நிக்கி இருக்கிறார்கள்

    இது போகோ ஜூனியர் என்று ஒருத்தர் அனுப்பியது நைட் ரொம்ப நேரம் ஆனது துக்கத்துல படிச்சி :-) பதிவு பண்ணிட்டேன்...

    நீங்க உங்க கருத்தை சொன்னதருக்கு மிக்க நன்றிகள் :-) நண்பரே .. அது தான் திருத்த உதவினது

    எனினும் தப்பு என்னுது ... சக்கரை என்னோட பொறுப்பு

    http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_2418.html
    நீங்கள் இட்லி வடை ப்லோக்ல் கூட இந்த பொண்ண பத்தி போட்டு இருக்கிற பதிவ பார்க்கலாம்

    ReplyDelete